Archive for ஜூன் 17, 2008

வறுமை !

வறுமை ! இதை ஒழிப்பதற்க்காகத்தான் இங்கு அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.அரசியல்வாதிகள் உயிரோடு இருக்கிறார்கள்.  குக்கிராமம் முதல் பெரும் நகரம்வரை, கோலம் போடவும், கொடி கட்டவும், சாலை அமைக்கவும், சாப்பாடு போடவும், வீடு கட்டவும், வேலை கொடுக்கவும் என எத்தனையோ காரணங்களைக் காட்டி உள்ளூர் வங்கி தொடங்கி உலக வங்கி வரை கையை நீட்டிக் கடன் வாங்குவது எதற்காக தெரியுமா? சத்தியமாய்…வறுமையை ஒழிப்பதற்காகத்தான். சட்ட மன்றத்திலும், நாடாளுமன்ற/பாராளுமன்றங்களிலும் ஏன் ஐ.நா.சபைவரை நம் அரசியல்வாதிகள் இதற்காகத்தான் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு கட்சியும் ஓட்டுப் பிச்சை வாங்க வரும்போது வரிசையாய் வசனம்பேசி சாகசம் செய்கிறார்கள்.அ.மு.க, ஆ.மு.க, இ.மு.க, ஈ.மு.க என்று தொடங்கி இங்கு கட்சிகளுக்குப் பஞ்சமில்லை.ஜாதிகளையும்,மதங்களையும் சொல்லி மக்களை ஏமாற்றி மனங்களைக் குழப்பி மாய மீன் பிடிப்பதும் கூட‌ வறுமையை ஒழிப்பதற்காகத்தான். அர‌சின் ந‌ல‌த்திட்ட‌ங்களும்  வறுமையை ஒழிப்பதற்காகத்தான். ஒவ்வொரு தேர்த‌லுக்கும், ஒவ்வொரு க‌ட்சியுட‌ன் கூட்ட‌ணி அமைத்து நேற்றைய‌ கூட்ட‌ணிக்க‌ட்சியை க‌ண்ட‌ப‌டி விம‌ர்சித்து, ஆட்சியில் ப‌ங்கு வ‌கிப்ப‌தும் வறுமையை ஒழிப்பதற்காகத்தான். ந‌ன்றாக‌ க‌வ‌ன‌த்தில் வைத்திருங்க‌ள். நம் அரசியல்வாதிகளை யாரும் தவறாகப் பேசாதீர்கள்.அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்.அவர்கள் வறுமையை ஒழிக்கத்தான் பாடுபடுகிறார்கள்.அவர்கள்(குடும்ப) வறுமையை ஒழிக்கத்தான் பாடுபடுகிறார்கள்.
ச‌கோத‌ர‌, ச‌கோதரிகளே!
வ‌ர‌ப்போகும் தேர்த‌லில்(election 2008) யார் யார் எந்த‌ எந்த‌ பக்க‌ம் சாய்கிறார்க‌ள், என்ன‌ என்ன‌  பேசுகிறார்க‌ள் என்ப‌தை என் ச‌கோத‌ர‌, ச‌கோதரிக‌ளே கொஞ்ச‌ம் கூடுத‌ல் க‌வ‌ன‌த்துட‌ன் க‌வ‌னியுங்க‌ள்.    dravidan. tamil. periyaar, viduthalai, hindu, hindu matham, muslim, islam, christian, veda , sex போன்ற வார்த்தைகளை வாசித்தது போதும் .உருப்படியாய் சிந்திப்போம்.

ஜூன் 17, 2008 at 8:27 முப பின்னூட்டமொன்றை இடுக


நாட்காட்டி

ஜூன் 2008
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Posts by Month

Posts by Category