Archive for மே, 2008

தீவிரவாதம்

சொல்லவே நா கூசுகிறது. நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே இன்று இந்த தீவிரவாதப்பேய் தலைவிரித்து ஆடிக்கொண்டுதானிருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் முதல் பார்வையற்ற முதியவர்வரை எத்தனையோ உயிர்களை காவு வாங்கிக்கொண்டுதானிருக்கிறது தீவிரவாதம். குறிப்பாக இந்தியாவில்….கேட்கவே வேண்டாம். இந்திய நிலமை எல்லோருக்குமே தெரியும். சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் 70 பேருக்குமேல் பலியாகினர். இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் என்ன? சில தீவிரவாதிகள் 100 பேரைக் கொன்றுவிட்டு நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிடுகின்றனர். இது எப்படி? இப்படி நாடு முழுவதும் தீவிரவாதம் கொழுந்துவிட்டு எரிய, அரசாங்கம் ஏன் வேடிக்கை பார்க்கிறது? அரசால் இவர்களை அடக்க முடியாதா? அல்லது அடக்க வேண்டாம் என்பது எழுதப்படாத சட்டமா?ஒவ்வொரு தேர்தலின்போதும் ஓட்டுப் பிச்சை கேட்டு வீடு வீடாய் வரும் அரசியல்வாதிகள், மக்களுக்குத்தரும் பாதுகாப்பு இதுதானா? இந்த நிலை மாற என்ன செய்ய வேண்டும்? தேசப் பற்றுள்ளவர்கள் வழி சொல்லுங்கள். இனியாவது இந்தியாவைக் காப்பாற்ற முயல்வோம்.

மே 30, 2008 at 2:24 முப பின்னூட்டமொன்றை இடுக

யார் பக்கம்?

“இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த‌ நாட்டிலே” சிலர் யாரையோ ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு இந்த நாட்டிற்கு துரோகம் செய்துகொண்டிருக்கிறார்கள். காரணம், அறியாமைதான். அரசியல் பிழைப்போரின் அசிங்கமான வாதங்களால் வளைக்கப்பட்டு, கம்யூனிசம்,நாத்திகம், போன்ற அரை வேக்காட்டு அரசியல்தனத்தால் தன் தலையிலேயே முக்காடு போட்டுக்கொள்ளும் முட்டாளாய் மாற்றமடைந்து, தானும் கெட்டு தன் எதிர்கால சந்ததியையும் கெடுக்கும் சதிதான் இன்று நடக்கிறது. போலி வாதம் பேசுபவர்களே! நாளை இன்னொரு சுதந்திரப்போர் நடக்கத்தான் போகிறது. உங்கள் பிள்ளைகள், பேரன்‍‍ பேத்திகள் அந்த‌ப் போரில் களத்தில் நிற்ப்பார்கள். பகுத்தறிவு வாதம் கேட்டு பாழாய் போனவர்களே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? போரில் உங்கள் பிள்ளைகள் பக்கமா? இல்லை நாட்டின் தொல்லைகள் பக்கமா?

மே 29, 2008 at 2:34 முப பின்னூட்டமொன்றை இடுக

பாரதத்தாய் காத்திருக்கிறாள்

ஒரு புறம் அரசியல்வாதிகளின் நையாண்டித்தனம்.ஒரு புறம் தீவிரவாதிகளின் திமிர்த்தன‌ம், ஒரு புறம் சீனாவின் சிறுபிள்ளைத்தனம்,ஒரு புறம் பாக்கிஸ்தானின் பச்சோந்தித்தனம். பாரத மாதா பாவம்தான்…. என்ன செய்வது ?
பெற்ற தாயைக் காப்பது பிள்ளைகளின் கடமையல்லவா? பிள்ளைகள் நாம் கை கோர்ப்பது எப்போது ? கடமையைச் செய்வது எப்போது? இன்னும் எத்தனை வருடம் வாழப்போகிறோம்? வாழ்நாளில் ஒரு தாயைக் காத்த திருப்தியாவது நமக்குக் கிடைக்கட்டும்.

பாரதத்தாய் காத்திருக்கிறாள். எழுமின் !

மே 28, 2008 at 8:06 முப பின்னூட்டமொன்றை இடுக

2020ல் இந்தியா

  1. 2020ல் இந்தியா வல்லரசு ஆகும் என கனவு கண்டார் அப்துல்கலாம். நம் அரசியல்வாதிகள் இந்தக் கனவை நிறைவேற விடமாட்டார்கள். சாதிகளாலும், ஏற்றத்தாழ்வுகளாலும் சிதைந்து போயிருக்கிற நம் சமுதாய மக்களை ஒருங்கிணைத்தாலே இந்தியா வல்லரசு ஆவது உறுதி. சுவாமி விவேகானந்தர் கேட்ட 100 இளைஞர்களில் ஒருவராய் தன்னை நாட்டுக்காக அர்ப்பணிக்க நம்மில் சிலர் தயாராக வேண்டும். அப்படிச் செய்தால் 2020ல் அல்ல 2010 லேயே இந்தியா வல்லரசாகும். 100ல் ஒன்றாக நான் ரெடி. நீங்க ரெடியா?

மே 27, 2008 at 7:33 பிப பின்னூட்டமொன்றை இடுக


நாட்காட்டி

மே 2008
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Posts by Month

Posts by Category