பாரதம் வலிமை பெற வேண்டும்

ஜூன் 4, 2008 at 1:55 முப பின்னூட்டமொன்றை இடுக

நாட்கள் வேகமாய் நகர்கிறது.சுவாமி விவேகானந்தரும், மகாகவி பாரதியும் கண்ட கனவுகள் இன்னும் நிறைவேறவில்லை.விஞ்ஞான வளர்ச்சி அபரிமிதமாய் தோன்றினாலும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் வளர்ச்சியோ, மாற்றமோ இன்னும் போதிய அளவு நிகழவில்லை என்பதே உண்மை. கல்வி கற்கும் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில்,உண்மையாய் கற்பிக்கும் ஆசிரியர்களைக் காண்பது அபூர்வமாய் இருக்கிறது. அரசியல்வாதிகளால் நம் பாரத நாடு உலக அளவில் மிகப்பெரிய அவப்பெயர் பெற்று வருகிறது. எங்கும் துவேஷமும், பொய்யும் தலை விரித்தாடுகிறது. பொய் வாக்குறுதி,புரட்சி வாக்குறுதி என்று புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு இளைய சக்திகளை கூட்டம் கூட்டமாய் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள் உண்மையை உணர வேண்டும். எதிர்கால சந்ததிகளுக்காக நாம் என்னென்ன சேர்த்து (தீமைகளை) வைத்துள்ளோம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். நம் குழந்தைகள்,பேரக்குழந்தைகள் எதையெல்லாம் சந்திக்கப் போகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் படித்த இளைஞர்களும், வசதியில்லாத இளைஞர்களும் அனுபவிக்கும் இன்னல்கள் இன்னும் 50 ஆண்டுகளில் எப்படி இருக்கும் என்பதை  கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் யோசியுங்கள். பாரதம் வலிமை பெற வேண்டும். பார் முழுதும் நம் கொடி பறக்க வேண்டும். ஜெய் ஹிந்த். ஜெய் ஹிந்த்.

Entry filed under: Uncategorized.

தீவிரவாதம் வறுமை !

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


நாட்காட்டி

ஜூன் 2008
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Most Recent Posts